வண்ணப் பட்டாடை உடுத்திய
வண்ணச் சிட்டுக்கள்
வட்டமிடத்துடிக்கும்
வரி வரியாய்க் காளையர்கள்
நகைக் கடையே கொலுமடமாய்
நங்கையர்கள் நானூறு பேர்
நன்றாக நோட்டமிடும்
நாலைந்து திருடர் கும்பல்
கள்ளுக் குடித்தவர்போல்
கலையாடும் காவடிகள்
காண அழகுப் பெண்கள் வந்தால்
காவடியில் வேகம் கூடும்
அன்று பார்த்த திரைப் படத்தை
அழகழகாய் சொல்லிடுவார்
ஆண்கள் கொஞ்சம் கூடிவிட்டால்
அரசியலும் சேர்ந்து விடும்
கோவில் என்றால் பக்தி என்பர் -
அங்கோ நாதியற்று நிற்கின்றார் கடவுள்!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment