Tuesday, 6 April 2010

தாயகத்தில் ஓர் அன்புறவு !

என் தாயகத்தில் ஒர் அன்புறவு
நான் இங்கு வந்தேன் அவளைத் துறந்து
என் மனம் முழுதும் அவளின் இருப்பு
நான் பாடுகிறேன் என்னை மறந்து.

குங்குமப் பூப்போல் செவ்விதழும் - அதில்
பூத்துக் குலுங்கும் புன்சிரிப்பும்
பல கவிதைகள் பேசும் கயல் விழியும் - என்னை
வாட்டுதம்மா அவை இன்றளவும்.

வானம்பாடிபோல் பாடுகிறாள் - அவள்
தோகை மயில் போல் ஆடுகிறாள் - தென்றல்
காற்று போல் என்னைத் தழுவுகிறாள் - நம்
பிரிவினால் தினம் வாடுகிறாள்.

வானில் ஒளி விடும் விண்மீனாய் - என்
மனதில் இனிக்கிறாள் செந்தேனாய்
உடல் வாடிப் போனது ஒரு சருகாய் - நான்
காலம் கழிக்கின்றேன் அவள் நினைவாய்.

No comments:

Post a Comment